தாமிரபரணி ஆற்றுக்கு வைகாசி விசாகம் அன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாக நாளான செவ்வாய்க்கிழமை, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில், தாமிரபரணி நல இயக்கம் சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த மூத்த நாடகக் கலைஞர் அருணாசலம் தாமிரபரணி ஆற்றில் பூக்களைத் தூவி மந்திரம் கூறினார். அதன்பின் தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. படம்: தமிழக தகவல் ஊடகம்
தாமிரபரணியைப் பாதுகாக்க உறுதிமொழி
1 mins read
-

