நூறாயிரம் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நூறாயிரம் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

1 mins read

சிவகங்கை: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நூறாயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேர் நிலையின் இருபுறமும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. உடைந்த தேங்காய்களைச் சேகரிக்க ஏராளமானோர் தலைக்கவசம் அணிந்தும் உடலில் சாக்குகளை கட்டியும் களமிறங்கினர்.

மேலும்