திருவள்ளூர்: வங்கியிலிருந்து 32 கிலோ நகைகள் கொள்ளையடிக் கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வங்கி ஊழியர் உள்ளிட்ட மூன்று பேரை போலிசார் கைது செய்து உள்ளனர். இரண்டு நாட்களுக்குமுன் திருவள்ளூரில் இயங்கி வரும் 'பாங்க் ஆஃப் இந்தியா' வங்கிக் கிளையில் இருந்து 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயின. தனியாருக்குச் சொந்த மான கட்டடத்தின் முதல் தளத்தில் வங்கிக் கிளையும் கீழே தரைத் தளத்தில் ஒரு கடையும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வார இறுதி நாட்கள் வங்கிக்கு விடுமுறை என்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கை வரிசை காட்டினர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஏழு கண்கா ணிப்பு கேமராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்ததும் நகைகள் வைக்கப்பட்டிருந்த பாது காப்புப் பெட்டகங்களை உடைக்கா மல், சாவி போட்டு அவற்றைத் திறந்து, நகைகள் கொள்ளையடிக் கப்பட்டதும் போலிசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வங்கி ஊழியர் கள் ஐவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. முடிவில், அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் விஸ்வநாதன் என்ப வருக்குக் கொள்ளையில் தொடர்பு இருப்பது உறுதியானது.

