ஸ்டெர்லைட்: நில ஒதுக்கீட்டை ரத்து செய்தது தமிழக அரசு

ஸ்டெர்லைட்: நில ஒதுக்கீட்டை ரத்து செய்தது தமிழக அரசு

1 mins read

சென்னை: கடும் எதிர்ப்பு கிளம்பி யதை அடுத்து தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அந்த ஆலைக்குச் சீல் வைக்கப்பட்ட நிலையில், அதன் விரிவாக்கத்திற் காக இடம் ஒதுக்கியதைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று தூத்துக்குடி மக்கள் புகார் எழுப்பி வந்தனர். ஆலையால் மேலும் பல பிரச்சினைகள் ஏற்படு வதாகக் கூறி, அதை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நூறாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட் டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும்