கோவில் விழாவில் வீசப்பட்ட விபூதி; பக்தர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம்

1 mins read

தேனி: கோவில் விழாவில் வீசப்பட்ட விபூதியால் 300க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல், வீக்கத்தால் பாதிக்கப்பட்டனர். தேனி அருகே உள்ள கொடுவிளார்பட்டியில் கடந்த ஐந்து நாட்களாக சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு விழாவின் நிறைவாகக் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. கத்தி போடும்போது உடலிலிருந்து அதிகளவு ரத்தம் வெளியேறாமல் தடுக்க நேர்த்திக்கடன் செலுத்துவோர் மீது விபூதி வீசப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் விபூதி வீசப்பட்டது. எனினும் திருவிழா முடிந்து வீடு திரும்பிய பக்தர்களுக்கு நள்ளிரவில் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலருக்குக் கண்களில் வீக்கமும் உண்டானது. இதையடுத்து நேற்று காலை முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் திரண்டனர். கண் எரிச்சல், வீக்கத்திற்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும்