திருப்பூர்: ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் குளத்தைக் காணவில்லை என திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் பகுதி மக்கள், ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் உட்பட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 2017-18ஆம் ஆண்டிற்கான சமூகத் தணிக்கை அறிக்கையில், புதிய குளம் அமைக்க ரூ.4.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 75 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த நஞ்சியம்பாளையம் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பகுதியில் குளம் அமைக்கும் பணி ஏதும் நடைபெறவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
குளத்தைக் காணவில்லை என புகார்
1 mins read

