காணும் நாள் நெருங்கி வருவதாக ஒருதரப்பு கூறிவருகிறது. நிஜத்தில் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, விஜய் நடிக்கும் திரைப்படங்கள் மட்டும் அரசியலை மிக ஆழமாகவே அலசுகின்றன. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதுப்படத்திலும் அரசியல் நெடி தூக்கலாவே இருக்குமாம். விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல் வாதிகளை எதிர்த்துப் போராடும் பணக்காரராக நடிக்கிறாராம் விஜய். மறுபக்கம் விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்து, சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதாரவியும், நிஜ அரசியல் பிரமுகரான பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏற்கெனவே விஜய் நடித்த 'தலைவா' படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்பட்டதால் அப்படத்தின் வெளியீட்டின்போது பிரச்சினை எழுந்தது. அதன் பின்னர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் ஒதுங்கியிருந்தார் விஜய்.
அரசியல் பேச வரும் விஜய் படம் நடிகர் விஜய்யும் அரசியல் களம்
30 May 2018 - 7:41 am
1 mins read
