கனவாகவே நீடிக்கும் அமராவதி நகரை உருவாக்கும் திட்டம்

கனவாகவே நீடிக்கும் அமராவதி நகரை உருவாக்கும் திட்டம்

1 mins read

அமராவதி: 'இப்படி ஒரு இந்திய நகரம் வேறெங்கும் இல்லை' என்று கூறுவதற்கேற்ப பூங்காக் கள், நதிகள், புத்துணர்ச்சி ததும் பும் காற்றுடன் சிங்கப்பூரை முன் மாதிரியாகக் கொண்டு நவீன, பசுமையான நகரை ஆந்திராவில் உருவாக்கத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் தென்னிந்திய தலை நகரான அமராவதியை உருவாக்க முன்னெடுத்துச் செல்லும் பணி இப்போது மெல்ல நகர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேச தலைநகரில் அமைந்துள்ள சில பொலிவூட்டும் கட்டடங்கள், கிராமங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் ஆகிய வற்றில் இருந்து அமராவதியை மாற்றுவதற்கு $15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$30.17 பில்லியன்) தேவைப் படுகிறது.