புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மெக்குனு சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன.
கர்நாடக மாநிலம், மங்களூரு, உடுப்பியில் பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கட்டடங்களிலும் தொழிற் சாலைகளிலும் வெள்ளம் புகுந்தது. பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார கம்பங்களும் சரிந்தன.

