இந்தோனீசியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண் டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து இந் தோனீசிய அதிபர் ஜோகோ விடோ டோவுடன் ஆலோசனை நடத்தி னார். தென்கிழக்கு ஆசிய நாடு களுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, முதல் கட்டமாக இந்தோனீசியா சென் றார். தலைநகர் ஜகார்த்தாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெர்தேக்கா அரண்மனைக்குச் சென்ற அவ ருக்கு ராணுவ வீரர்கள் அணி வகுப்பு மரியாதை அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா, இந்தோனீசிய நாட்டுக் கொடிகளை ஏந்தி நின்ற சிறுவர், சிறுமிகளில் சிலர் மோடியின் கைகளில் முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற பட்டம் விடும் கண்காட்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தோனீசிய அதிபருடன் உற்சாகத்துடன் பட்டம் விடும் விளையாட்டில் ஈடுபட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

