சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஒருமையில், மிரட்டும் தொனியில் பேசியதற் காக நடிகர் ரஜினிகாந்த் மன் னிப்புக் கேட்கவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியபின் சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலை யத்தில் கூடியிருந்த செய்தியாளர் களிடம் பேசினார். மிகவும் ஆவேசமாகப் பேசிய அவர் ஒரு கட்டத்தில், "ஏய்! வேறு ஏதாவது கேள்வி இருக்கா?" என்று கோபமாகவும் ஒருமையில் மரியாதைக் குறைவாகவும் கேட்ட தால் அங்கு கூடியிருந்த ஊடகத் தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
'ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்'
1 mins read

