ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

1 mins read

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக யார் எத்தகைய வழக்கைத் தொடுத் தாலும் தங்கள் கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப் பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அண்மையில் ஆணை பிறப் பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் உரிமையாளரான வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மேலும்