மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியான இமாச்சலப்பிரதேச மாநிலம், தியோக் பகுதிக்கு அருகே நேற்று காலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பகுதி சிம்லாவில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அப்போது எதிர் பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மலைப்பாங்கான பாதையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்படையினருடன் பொதுமக்களும் பேருந்தைச் சுற்றி நிற்கின்றனர். படம்: ஏஎஃப்பி இமாசலப்பிரதேசம் போன்றே மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு அருகில் உள்ள யவாத்மால் பகுதியில் நேற்று காலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.