வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை

1 mins read

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் படித்த, 35 வயதுக்கு மிகாமல் இருக்கும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர் களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கும் முயற்சியில் ஆந்திர அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஆந்திர மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஆந்திர அரசாங்கத்தால் ரூ.1,200 கோடி ஒதுக்கப்படவுள்ளது. ஒரே குடும்பத்தில் இரு பட்டதாரி இளைஞர்கள் இருந்தாலும் அவர்களுக்கு மாதாந் திர உதவித்தொகையாக ரூ.1,000 அளிக்கப்படும்," என்றார்.

மேலும்