சென்னை: தமிழ்நாட்டில் கோயம்புத் தூர் நகரில் 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு இம்மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது என்று தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத் தின் துணை வேந்தர் கே ராமசாமி அறிவித்து இருக்கிறார். அந்த மாநாடு, 'அறிவார்ந்த தமிழ்த் தேடல் செயலிகள்' என்ற கருப்பொருளுடன் நடைபெறும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இணையம் வழி தமிழ், விக்கி பீடியா, சமூகக் கட்டமைப்புகள், தமிழ் மின்னிலக்க நூலகம், மின்னிலக்க ஆவணக் காப்பகம், தமிழ் தொடர்பான கணினித் தகவல்கள், நிகர்நிலை கற்றல் உள்ளிட்ட பலவும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று திரு ராமசாமி குறிப்பிட்டுள்ளார். மேல் விவரங்களுக்கு www. tamilinternet conference.org என்ற முகவரியை நாடலாம் என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

