தூத்துக்குடி: தூத்துக்குடி துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஐநா மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் கண்டித்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையற்ற, ஆட்களைக் கொல் லும் வகையில் கூடுதலான சக்தி யை தமிழக காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறிய நிபுணர்கள், மனித உரி மையை மீறியவர்களை நீதிக்கு முன் நிறுத்த சுதந்திரமான விசார ணைக்குழுவை அமைக்க வேண் டும் என்று வலியுறுத்தினர்.
அதே சமயத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் வேதாந்தா நிறுவனமும் குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப் பான நீரும் சுகாதார பராமரிப்பும் கிடைப்பதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இம்மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஆட்சியர் அலு வலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் பேரணியாகப் புறப்பட்டு சென்றனர்.

