ஒரே அணியில் திரள உறுதி

ஒரே அணியில் திரள உறுதி

1 mins read

திருவாரூர்: திமுக தலைமையின் கீழ் ஓரணியாகத் திரள தோழமைக் கட்சித் தலைவர்கள் உறுதி தெரி வித்து உள்ளனர். திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடந்த திமுக தலைவர் கருணா நிதியின் 95வது பிறந்தநாள் வாழ்த்தரங்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் அந்த உறுதி யைப் புலப்படுத்தினர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கள் உட்பட பல கட்சித் தலைவர் களும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தோழமைக் கட்சிகளிடையே உள்ள இணக்கத்தை முக்கியமாகக் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய தலைவர்கள் திமுகவுடன் திரண்டு போராட உறுதி கூறினர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இனி யார் வந்தாலும் திராவிடத்தை அழிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும்