சென்னை: விருதுநகர் ஒன்றியத் தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் பொருட்கள் தயாரிக்கும் புதிய ஆலை நிறுவப்படும் என்று அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் நடந்த பால் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர், சென்னையில் முதல் கட்டமாக மூன்று இடங்களில் அறிமுகமாகி உள்ள 'ஆவின் உடனடி காபி' திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார். தமிழகத்தில் அன்றாடம் 30.67 லட்சம் லிட்டர் பால் கொள் முதலாவதாகவும் 22.08 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப் படுகிறது என்றும் அதிகபட்ச மாக கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னையில் 12.63 லட்சம் லிட்டர் பால் விற்பனையானதாக வும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தமிழகம் முழுவதும் விரைவில் உடனடி ஆவின் காபி
1 mins read

