சென்னை: மணல் இறக்குமதிக்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக ஒப்பந்த நிறுவனம் ஒன்றை நியமிக்க அர சாங்கம் இறுதி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 500,000 டன் ஆற்று மணலை இறக்குமதி செய்யும். அந்த மணலை அரசாங்கத்தின் பொதுப் பணித்துறை விநியோகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒப்பந்த நிறுவனத்தை முடிவு செய்வதற்கான ஏலக்குத்தகைகள் இப்போது மதிப்பிடப்பட்டு வருவ தாகவும் அந்த நிறுவனம் எது என்பது அடுத்த வாரம் முடிவாகி விடும் என்றும் பொதுப் பணித் துறையைச் சேர்ந்த தகவல் வட்டாரம் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
மணல் இறக்குமதிக்கு ஆயத்தமாகிறது அரசு
1 mins read

