கோவை: கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது

கோவை: கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது

1 mins read

கோவை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வண்ணத்தில் நகல் எடுத்துப் புழக்கத்தில் விட்ட ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிய 2,000, 500, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் கள்ள நோட்டுக ளின் புழக்கம் நன்றாகக் குறைந்தி ருந்தது. இந்நிலையில் மீண்டும் கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் தலைகாட்டத் துவங்கியுள்ளன.

அந்த வகையில் கோவையில் 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இரு சக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் இருசக்கர வாகனத் தில் வந்தபோது, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசா ரணை மேற்கொண்டனர். அப் போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய ஆனந்தன் மீது போலிசாருக்குச் சந்தேகம் அதிகரித்தது.

மேலும்