மத்திய அரசின் விஷமத்தனம்: சாடுகிறார் திருநாவுக்கரசர்

மத்திய அரசின் விஷமத்தனம்: சாடுகிறார் திருநாவுக்கரசர்

1 mins read

அரியலூர்: தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அர சுக்கு மட்டுமின்றி, மத்திய அரசுக் கும் பொறுப்புள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழகத்தில் தீவிரவாதிகளும் சமூக விரோதிக ளும் ஊடுருவி உள்ளதாக மத் திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் கூறியது கண்டனத்துக் குரியது என்றார். "தீவிரவாதிகள் தொடர்பில் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அந்த அரசே தீவிரவாதிகள் ஊடுருவிய தாகச் சொல்வது விஷமத்தன மானது," என்றார் திருநாவுக்கரசர். மோடியின் அலை ராகுல்காந்தி யால் தடுத்து நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது ராகுல் அலை தொடங்கி விட்டது என்றார்.

மேலும்