ஆட்டோவில் வந்து பணம் பறிக்கும் புதுக்கும்பல்

ஆட்டோவில் வந்து பணம் பறிக்கும் புதுக்கும்பல்

1 mins read

சென்னை: இளையர் ஒருவரை ஆட்டோவில் கடத்திச் சென்று கத்தி முனையில் பணம், நகையைப் பறித்துச்சென்ற கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 1ஆம் தேதி இரவு சென்னையில் நிகழ்ந்துள்ளது. அன்று இரவு மைலாப்பூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார் 24 வயதான பூபேந்தர் யாதவ். அப்போது திடீரென அங்கு வந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய சிலர் பூபேந்த ரையும் வலுக்கட்டாயமாக அதற்குள் ஏற்றிக்கொண்டு பறந்தனர். சிறிது தூரம் சென்ற பிறகு அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைபேசி, ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்ட அந்த மர்மக் கும்பல் ஒரு பாலத்தின் கீழே இறக்கி விட்டுத் தப்பிச் சென்றது. இப்புதுக் கும்பலுக்கு போலி சார் வலைவீசியுள்ளனர்.

மேலும்