காவிரி ஆணையம்: நிரந்தரத் தலைவராக நீர்ப்பாசன வல்லுநரை நியமிக்க பாமக வலியுறுத்து

1 mins read

சென்னை: காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி ஆணையத்தின் தலைவ ராக நீர்ப்பாசன வல்லுனரை நிய மித்து அதை முழுக்க முழுக்க தொழில்நுட்ப அமைப்பாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மாநிலங் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் ஆணையத்திற்கே வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

"மத்திய அரசு அமைக்கவுள்ள மேலாண்மை ஆணையம் ஒரே ஒரு நீர்ப்பாசன வல்லுனரையும், 8 நிர்வாக அதிகாரிகளையும் கொண்டிருக்கும். 8 நிர்வாக அதிகாரிகளில் குறைந்தது 5 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பர்.

மேலும்