பழிக்குப் பழி வாங்க சிலர் சதித்திட்டம்: தூத்துக்குடியில் பதற்றம்

1 mins read

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் தூத்துக் குடியைச் சேர்ந்த சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வெளியான தக வல் அங்கு புதிய பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. அண்மையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது தூத்துக்குடியில் வன்முறை வெடித் தது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் அந்தச் சம்பவத் திற்குப் பழி வாங்க, போலிசார் மீது மீண்டும் தாக்குதல் நடத்த சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்குத் தெரியவந் துள்ளது.

குரூஸ்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரும், சுனாமி நகரைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியிருப்பதாகத் தமிழகம் முழு வதும் உள்ள காவல் நிலையங்க ளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. மிக விரைவில் மீன வர்கள் சிலருடன் சேர்ந்து மொட்டைகோபுரம் கடற்பகுதியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த மேற்குறிப்பிட்ட மூன்று பேரும் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2

மேலும்