கிருஷ்ணகிரி: கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப் புரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தென்பெண்ணை ஆற்றுக்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை: ஐந்து மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
1 mins read

