தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை தொடங்கியது

1 mins read
39cf2cdd-295b-4695-9bca-c558012eb0d4
-

தூத்துக்குடி: 13 பேரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது விசார ணையை நேற்று தூத்துக்குடியில் தொடங்கியது.

இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்த நீதிபதி அருணா, முதலில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொதுமக்கள், பாதிக் கப்பட்டவர்களிடம் இருந்து அவர் மனுக்களைப் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன். படம்: தமிழக ஊடகம்

மேலும்