புதுடெல்லி: சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் வழக்கின் தொடர்பில் ஜூலை 17ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஜனவரியில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசி தரூர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், தற்கொலைக்குத் தூண்டியதாக சசி தரூருக்கு எதிரான புகாருக்கு முகாந்திரம் உள்ளதால் ஜூலை 17ல் முன்னிலை யாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 17ஆம் தேதி முன்னிலையாக சசி தரூருக்கு அழைப்பாணை
1 mins read

