'போர் என்ற பேச்சுக்கே இடமில்லை'

'போர் என்ற பேச்சுக்கே இடமில்லை'

1 mins read

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் எந்தச் சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை எனப் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் ஜெனரலும் செய்தித் தொடர்பாளருமான மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "இந்தியாவுடன் எந்தச் சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த முடிவை வைத்து பாகிஸ்தான் ராணுவம் பலவீனம் அடைந்துவிட்டதாக இந்தியா தவறாக கருதக்கூடாது. இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை 1,077 முறை இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது," என்றார்.

மேலும் செய்திகள்