நீதி விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

நீதி விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

1 mins read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சூர்யபிரகாசம் என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு நிலுவையில் உள்ளதால் நீதி விசாரணை நடத்தக்கூடாது என்று திரு சூர்ய பிரகாசம் முறையீடு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்