சென்னை: அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட் களுக்குத் தடை விதிக்கப்படுவ தாக அரசு அறிவித்துள்ளது. எனினும் பால், தயிர், மருத் துவப் பொருட்கள் அடைக்கப்பட் டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவ தாக நேற்று சட்டப்பேரவையில் பேசியபோது முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார். துணிப்பைகளையும் பிளாஸ் டிக் அல்லாத பொருட்களையும் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், பிளாஸ்டிக் பைகள் மற்றும் போத்தல்களைத் தயாரிக்க வும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்றார்.
தமிழக முதல்வர் பழனிசாமி. படம்: ஊடகம்

