13 கிலோ எடைகொண்ட புகார் மனுக்களை தலையில் சுமந்து வந்த தாய்-மகன்

13 கிலோ எடைகொண்ட புகார் மனுக்களை தலையில் சுமந்து வந்த தாய்-மகன்

1 mins read
fe7c1cba-29e9-429c-a785-f965623de790
-

கடலூர்: போலி ஆவணங்கள் தயாரித்து தமது நிலத்தை சிலர் அபகரித்துவிட்டதாக கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த குண்டு பிள்ளை என்ற 62 வயது மூதாட்டி புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தாம இது வரை அளித்துள்ள 13 கிலோ எடை கொண்ட மனுக்களைத் தலையில் சுமந்தபடி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐவதுகுடி கிராமத்தில் திருமதி குண்டுபிள்ளைக்குச் சொந்தமாக இர ஏக்கர் நிலம் இருந்தது. சிலர் அதை அபக ரித்துவிட்டதாக 11 ஆண்டு களுக்குமுன் ஆட்சியர் அலுவல கத்தில் அவர் புகாரளித்தார். அதன் பிறகு அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரிடம், பல்வேறு அரசு அலுவலகங்களில் அவர் தொடர்ந்து மனுக்களை அளித்துள்ளார். அந்த மனுக்க ளின் நகல்கள் மட்டுமே 13 கிலோ அளவுக்குச் சேர்ந்தன.

தம் மகனுடன் மனுக்கள் அடங்கிய மூட்டையைத் தலையில் சுமந்து வந்த திருமதி குண்டுபிள்ளை. படம்: தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்