அரசு: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுப்பது உச்ச நீதிமன்றத்தின் கையிலுள்ளது'

அரசு: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுப்பது உச்ச நீதிமன்றத்தின் கையிலுள்ளது'

1 mins read

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கான அதிகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது எனத் தமிழகச் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் பேசிய அவர், உச்சநீதி மன்றம் சம்மதம் தெரிவித்தால் 7 பேரையும் தமிழக அரசு உட னடியாக விடுதலை செய்துவிடும் என்றார்.

முன்னதாகப் பேரவையில் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண் டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த அமைச் சர் சண்முகம், 7 பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்றார். "மாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டு விடுதலை செய்யப் படும் கைதிகளுக்கு என சில வழிகாட்டுதல்களையும், கட்டுப் பாடுகளையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

மேலும் செய்திகள்