தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆறுதல் கூறி நிதி உதவியளித்த விஜய்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆறுதல் கூறி நிதி உதவியளித்த விஜய்

1 mins read
6a29e627-ca12-47fb-9f40-7076d510d65f
-

நள்ளிரவில் வந்தார்: ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த விஜய் சென்னை: நள்ளிரவு வேளையில் திடீரென வீடு தேடி வந்து ஆறு தல் கூறி, நிதி உதவியும் அளித்துச் சென்ற நடிகர் விஜய்க்கு தூத்துக்குடி துப் பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலிசார் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் துப் பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு வந்தார் நடிகர் விஜய். இரவு சுமார் 1.30 மணி அளவில் அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்கச் சென் றார்.

ஆறுதல் கூறும் நடிகர் விஜய். படம்: தமிழக தகவல் ஊடகம்