10 தினங்கள் தொடர் மழை பெய்யும்

10 தினங்கள் தொடர் மழை பெய்யும்

1 mins read

சென்னை: கோடைகாலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 8ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று முதல் அடுத்த 10 தினங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். "சென்னையைப் பொறுத்தவரை அதிகளவு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் பிரதீப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை சென்னையில் பெய்த சாரல் மழை, பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

மேலும் செய்திகள்