துப்பாக்கிச் சூடு நடத்திய 9 போலிசார்: தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை

துப்பாக்கிச் சூடு நடத்திய 9 போலிசார்: தேசிய மனித உரிமை ஆணைய குழு விசாரணை

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண் டனம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்திய 9 போலிசாரிடம் இக்குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த சனிக்கிழமை முதல் தேசிய மனித உரிமை ஆணையம் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்க ளின் குடும்பத்தாரிடம் விவரங் களைச் சேகரித்துள்ளனர்.

உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையக் குழு, துப்பாக்கிச்சூடு நடத்திய போலிசாரிடம் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியுள்ள னரா? எனக் கேட்டறிந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த மற்ற காவலர்கள், அதிகாரிகளிட மும் இக்குழு விவரங்களைச் சேகரித்துள்ளது.

மேலும் செய்திகள்