ராமதாஸ்: நீட் விலக்கு பெறுவதுதான் தமிழகத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்

ராமதாஸ்: நீட் விலக்கு பெறுவதுதான் தமிழகத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்

1 mins read
9b44ba76-08bd-4d5f-9f25-3ffa3ce24261
-

சென்னை: தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் வேளை யில், 'நீட்' தேர்வில் தமிழகம் கடைசி இடத்தை பிடித்திருப்பது, தமிழக ஆட்சியாளர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள் ளார். இந்த மோசமான சாதனைக்கு முழு காரணம் தமிழக அரசு தான் என அறிக்கை ஒன்றில் அவர் சாடி உள்ளார். தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்ததில் மத்திய அரசின் பங்களிப்பை புறந்தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் நீட் தேர்வு மையங்களை அமைக்காமல் மத் திய அரசு துரோகம் செய்துவிட்ட தாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான் தமிழகத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், அதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான பயிற்சி வழங்குவதன் மூலம் அத்தேர்வில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்றும் அவர் கூறியுள்ளார். "கேரளா, ராஜஸ்தான் உள் ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து தமிழக மாணவர்களை அலைக்கழித்தது, 49 வினாக்களை எழுத்துப் பிழையுடன் வழங்கியது, தமிழ் மொழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாளை வழங்கி பதற்றப் படுத்தியது என தமிழக மாண வர்களுக்கு மத்திய அரசு திட்ட மிட்டே ஏராளமான நெருக்கடி களைக் கொடுத்தது. இவையும் பாதிப்பை ஏற்படுத்தின," என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்