காஞ்சிபுரம்: பெருமாள் பாசுரங்களைப் பாடுவது தொடர்பில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த மே 25ஆம் தேதி இக்கோவிலில் பிரம்மோற் சவ விழா தொடங்கியது. இதையடுத்து தென்கலை, வடகலை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சில நிகழ்வு களின்போது பாசுரங்கள் பாடி வழிபாடு செய்து வருகின்றனர்.
இதில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில் பெருமாள் வீதி உலா நிகழ்வின்போது ஒரு பிரிவினர் பாசுரங்கள் பாட, மற்றொரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வாக்கு வாதம் வெடித்தது. இதையடுத்து போலிசார் குவிக்கப் பட்டனர்.

