சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட் டத்தின்போது 11 பேர் கைதாகி யுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து இரு மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சென்னை பூங்காநகர் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 11 பேரைப் போலிசார் கைது செய்தனர். இதையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய போராட்டக் குழுவினர், நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். "நீட் தேர்வு அப்பாவி கிராம மாணவிகளின் உயிரைப் பறிக்கி றது. இத்தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்," என்றும் மாணவர்கள் மேலும் கூறினர்.
நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாணவர்கள். படம்: தகவல் ஊடகம்

