காற்றில் மிதக்கும் பலூன் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி

காற்றில் மிதக்கும் பலூன் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி

1 mins read

டேராடூன்: காற்றில் பறக்கும் பலூன்கள் மூலம் இந்தியாவின் தொலைதூர கிராமங்கள், மலைப் பிரதேசங்களுக்கு கைத்தொலை பேசி இணையச் சேவை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசி கோபுரங் களுக்கு மாற்றாக மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் காற்றில் பறக் கும் பலூன் மூலம் கைத்தொலை பேசி-இணைய இணைப்புப் பெறும் வசதியைக் கண்டுபிடித்து உள்ளது. 50 லட்ச ரூபாய் செலவில் 'ஏரோஸ் டாட் டெக்னாலஜி' முறையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூ னில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். அதில் 'டிரான்ஸ்ரிசீவர் ஆன்டனா' கருவி பொருத்தப் பட்டு இருக்கும். இதன்மூலம் 7.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வைஃபை இணைப்பு கிடைக்கும். இந்தியாவின் முதலாவது 'ஏர்பலூன்' இணையச் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்