ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய 100 எரிவாயு உருளைகள்

ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய 100 எரிவாயு உருளைகள்

1 mins read

பாட்னா: பீகாரின் பாட்னா புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு உருளை கிடங்கில் லாரியில் இருந்து உருளைகளை இறக்கிக் கொண்டு இருந்தனர். சுமார் 450 உருளைகளை ஏற்றி வந்த அந்த லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு எரிவாயு உருளைகள் கைநழுவி தரையில் விழுந்தது. விழுந்த எரிவாயு உருளை சூடாக இருந்த லாரியின் சைலன்ஸர் மீது பட்டதில் வெடித்துச் சிதறியது. இதனால் அந்த லாரியில் தீ பிடித்தது. தீயின் வெப்பத்தால் லாரியில் இருந்த நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் வேகமாக பரவிய தீ, அருகாமையில் உள்ள ரசாயன ஆலையையும் பதம் பார்த்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்