துப்பாக்கிச் சூடு: திருமா எழுப்பும் திடீர் சந்தேகம்

துப்பாக்கிச் சூடு: திருமா எழுப்பும் திடீர் சந்தேகம்

1 mins read
d1db5517-e673-487c-a568-3e87b53b3d50
-

கடலூர்: தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல் துறையினர் தானா? எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குப் பங்கு இருக்கலாம் எனும் சந்தேகத்தையும் திருமாவளவன் எழுப்பியுள்ளார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது, ஆலையின் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் அடியாட்களா? என்றும் திருமா வளவன் எழுப்பியுள்ள கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் போராட்டம் நடத் தப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் பிரம்மாண்ட பேரணியாகச் சென்றபோது திடீரென வன்முறை வெடித்தது.

மேலும் செய்திகள்