திருப்பூர்: பிரபல தொழிலதிபர் ஏ.சி. முத்தையா மீதான வங்கி மோசடி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிண்டிகேட் வங்கியில் கடன் பெற்றதன் மூலம் அந்த வங்கிக்கு ரூ.103 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்பது ஏ.சி. முத்தையா மீதான குற்றச்சாட்டு. தனது நிறுவனத்தின் வருவாயை அதிகமாகக் காட்டி, வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றதுடன், இந்தக் கடன் தொகையைத் தனது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இதர நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிட்டார் என்றும் முத்தையா உள்ளிட்ட 23 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி, குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஏ.சி.முத்தையா மீது வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
1 mins read

