சென்னை: நேற்று மதியம் அய்யாக்கண்ணு தலைமை- யிலான விவசாயிகள் சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன் றனர். ஆனால் காவல்- துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து ஒரு சமூகநலக் கூடத் தில் அடைத்து வைத்தனர். பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு, "காவிரி நீர் வேண்டி நாங் கள் 6 மாதங்க ளாகப் போராடுகிறோம், எங் க ளைச் சந்திக்க முதல்- வரும் விவசாய அமைச்சரும் மறுக்கிறார்கள். மத்திய அரசும் சந்திக்க மறுக்கிறது. இந்த முறையும் டெல்டா பாசனத் திற்- கான தண்ணீரைத் திறக்கமுடி யாது என முதல்வர் சொல்கி றார். அதனால்தான் எங்களது எதிர்ப்பை தமிழக அரசிற்கும் மத்திய அரசிற்கும் தெரி- விக்கும் வகையில் நாங்கள் மொட்டை போட்டுப் போராட முயன்றோம். ஆனால், இது தவறு என எங்களை கைது செய்துள்ளனர் என்றார் அவர்.
நதிகள் இணைப்புப் போராட்டம்
1 mins read

