குமரி மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

1 mins read

நாகர்கோயில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 23.4 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோயிலில் நேற்று காலையில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள் ளம் கரைபுரண்டு ஓடியது. கன்னி- யாகுமரி, சாமித்தோப்பு, கொட்டா- ரம், பொற்றையடி பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடைவிடாது கனமழை பெய்தது. தொடர் மழை- யின் காரணமாக இதமான குளிர்க்- காற்றும் வீசி வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்