மாம்பழங்கள் ஒரு டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் அழிக்கப்பட்டன

மாம்பழங்கள் ஒரு டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் அழிக்கப்பட்டன

1 mins read

சேலம்: செயற்கை முறையில் 'எத்திலின்' கரைசல் மற்றும் சோடா உப்புக் கொண்டு செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 1 டன்னும், வாழைப்பழம் 1.75 டன்னும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. பின்னர் செயற்கையான முறையில் பழங்களை இது போல பழுக்க வைத்தால் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் சேலத்தில் மாம்பழ வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. அனுமதிக்கப்படாத சோடா உப்பினை, மாம்பழங்கள் மீது தெளித்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கின்றனர். இதனைச் சாப்பிடுபவர்களுக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு ஏற்படும்.

மேலும் செய்திகள்