விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

1 mins read

நீலகிரி: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் கனமழை பெய்துள் ளது. அதேசமயம் சில மாவட்டங் களில் சூறாவளிக் காற்றும் புழுதிப் புயலும் வீசியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஊட்டியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 250 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. இதனால் அக்கிராமங்கள் இரு ளில் மூழ்கின. தென்மேற்குப் பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏராளமான மரங் கள் வேரோடு சாய்ந்துள்ளன. சனிக்கிழமையன்று சூறாவளிக் காற்றும் பலமாக வீசியதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் அக்கம்பங்களும் சாய்ந்தன. இதையடுத்து 250 கிராமங்களில் மின்விநியோகம் தடைபட்டது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் கனமழை நீடித்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. குமரியிலும் மழை வெளுத்துக்கட்டி வருகிறது. அங்கு நித்திரவிளை கொல்லங் கோடு, அருமணை, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் உள் ளிட்ட 50 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை யில் பெய்துவரும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. உள்ளூர் ஆறுக ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. சில இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்