பாண்டிய மன்னர் காலத்து சிலைகள் கண்டெடுப்பு

பாண்டிய மன்னர் காலத்து சிலைகள் கண்டெடுப்பு

1 mins read

மதுரை: பாழடைந்த கல் மண்ட பத்தில் இருந்து பாண்டியர் கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கல்மண்டபம் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. இதையடுத்துக் கோவில் அதிகாரிகளும் பொதுமக்களும் நேற்று முன்தினம் இம்மண்ட பத்தைச் சுத்தப்படுத்தினர். அப்போது முருகன் சிலை, ஐந்து முகம் கொண்ட சந்திர மௌலி சிலை, நந்தி சிலை ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். இதுகுறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் மூன்றும் பாண்டிய மன்னர்கள் காலத்துச் சிலைகள் என்று தெரியவந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்