லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் கொட்டித் தீர்த்த கனமழை, மின்னல் வெட்டு தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புழுதிப்புயல், மின்னல் போன்ற இயற்கை சீற்றத் தால் உ.பி. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இந்த மாநிலத்தில் இடி, மழை, சூறைக்காற்று இன்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது.
டெல்லியின் மாண்டி ஹவுஸ் பகுதியில் திடீரென்று வீசிய புழுதிக் காற்று, இடி, மின்னல் தாக்குதலால் டெல்லி மாநகரம் முழுவதுமே இருளில் மூழ்கியது. உத்தரப்பிரதேசத்தின் ஒருசில மாவட்டங்களில் உள்ள குடியிருப் புப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம், மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந் ததாக அம்மாநில அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற் கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

