திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று பேசிய வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன், கடந்த மே 29ந்தேதி பருவமழை தொடங் கியது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களில் மழைக்கு 16 பேர் பலியாகி யுள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்த மழையால் 1,109 வீடுகள் சேதமடைந்துள் ளன. 61 வீடுகள் முழுவதும் இடிந்து போயுள்ளன. 33 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என முதற்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கனமழைக்கு 16 பேர் பலி
1 mins read

