மத்திய வங்கியின் முக்கிய பொறுப்பு என்பது நிதிமுறையை நிலைப்படுத்துவதும், வாடிக்கை யாளர்களின் பணத்தைப் பாது காப்பதும்தான். அந்த முறையில், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறி விட்டு அதில் இருந்து தப்பிக்க மத்திய வங்கி முயல்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியால், மத்திய வங்கி யின் நம்பகத்தன்மை பாதிக்கப் பட்டுள்ளது. மோசடியின் தொடர்பாக சிலர் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது. அது அரசின் இழப்பின் காரண மாக எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது உள்நோக்கில் எடுக்கப் பட்டதா. உண்மையில் குற்றவாளி கள் கைது செய்யப்பட்டார்களா? தண்டிக்கப்பட்டார்களா? போன்ற எந்தக் கேள்விக்கும் விடையில்லை. ஆனால், வங்கி முறையில் மட்டும் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். பொதுத்துறை வங்கி களின் எதிர்காலம் குறித்துத் தெளிவான முடிவெடுக்க வேண்டும்," என்றார் மத்திய வங்கியின் முன் னாள் தலைவர் ஒய்.வி.ரெட்டி.
'வங்கி மோசடிகளால் மத்திய வங்கியின் நம்பகத்தன்மை பாதிப்பு'
1 mins read

